Alumni Meet 2021
தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற முதல் செயற்குழுக் கூட்டம் 19..11.2021 வெள்ளியன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தாளாளர் மற்றும் இயக்குநர் அருட்சகோ.A.குழந்தைராஜ் சே.ச, தலைமை தாங்கி 2021-2022 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
தலைமையாசிரியர் அருட்பணி V.அகஸ்டின் ஜான் பீட்டர் சே.ச,வாழ்த்துரை வழங்கினார்.கலைமனைகளின் அதிபர்.அருள்முனைவர்.V.ஹென்றி ஜெரோம் சே.ச,ஒளியின் வழி வாழ்வு என்று ஆசிவழங்கினார்.
முன்னாள் மாணவர் திருமிகு.R.சங்கர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற அரசு வழக்குரைஞராக பதவியேற்றதைப் பாராட்டி மூத்த வழக்குரைஞரும் மேனாள் அரசு வழக்கறிஞருமாகிய திருமிகு.T.கபிரியேல்ராஜ் வாழ்த்துரை வழங்க,அதிபர் தந்தை பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.
முன்னதாக திரு.K.B.அருணா சிவாஜி இறைவணக்கம் பாட,வந்தோரை பொருளாளர் திரு.I.பீட்டர் ஞானசெல்வம் வரவேற்றார்.கடந்த கூட்ட அறிக்கையை செயலாளர் திரு. வ.பால் கதிரவன் வாசித்தார்.
கணித ஆசிரியர் திரு.S.பெனடிக்ட் ராஜன் நன்றி கூறினார்.விழா நிகழ்வுகளை கூடுதல் செயலாளர் திரு.S.சூசை அமல்ராஜ் தொகுத்து வழங்கினார்.இயக்குநர் அருட்சகோ.A.குழந்தைராஜ் சே.ச,வழிகாட்டுதலில்,துணைத்தலைவர் திரு.M.இலாசர்,பால் கதிரவன்,சூசை அமல்ராஜ்,பீட்டர் ஞானசெல்வம்,சங்கர் கணேஷ் சிறப்பாக செய்திருந்தனர்.


தலைமை ஏற்க வா என்ற தலைப்பில் கலைமனைகளின் அதிபர்.V.ஹென்றி ஜெரோம் கருத்துரை வழங்கிய போது… முன்னாள் மாணவர் மன்ற இயக்குநஅருட்சகோ.A.குழந்தைராஜ் சே.ச,வாழ்த்துரை வழங்கிய போது…கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர்.v.ஹென்றி ஜெரோம்,அருள்முனைவர்.S.M.ஜான் கென்னடி,சிலுவை அருள் மரியஜோசப்,இலாசர்,பால் கதிரவன்.



